திடீரென முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன தனுஷ்!.. காரணம் இதுதான்!...
நடிகர் தனுஷ் வெற்றிப்படம் கொடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டது. வரிசையாக அவரின் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.
இந்த திரைப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தனக்கு ஒரு வெற்றிப் படமாக அமையும் என்கிற நம்பிக்கையில் தனுஷ் இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் உயர் போலீஸ் அதிகாரியாக சாய் பல்லவியும் நடித்துள்ளார்..
இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான் தனுஷ் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
அதில், வருகிற நவம்பர் 20ம் தேதி வெளியாகவிருக்கும் ஓம் திரைப்படத்திற்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதல்வர் திரு விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று அவர் அதில் தெரிவித்திருக்கிறார். மேலும் காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும் அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனவும் அந்த அறிக்கையில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
