×

திடீரென இறந்து போன ரசிகர் - நிலை குலைந்து போன பிக்பாஸ் கவின்
 

நடிகர் கவின் தனது ரசிகர் ஒருவரின் மரணம் பற்றி உருக்கமான கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே சீரியல்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இந்நிகழ்ச்சிக்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதில் கமல் என்பவரும் ஒருவர். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கவினின் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவர் மரணமடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கவின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இந்த வாழ்க்கை நிரந்தமில்லாதது. நம்முடைய நேரம் எப்போது நமக்கு வரும் எனதெரியாது.எனவே, நம் அருகில் இருப்பவர்களுடனும், நெருக்கமானவர்களுடனும் அன்பாக இருங்கள். கமலின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News