×

திடீர் திருப்பம் - பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா

முன்னாள் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்துள்ளார்.
 

ஜெயலலிதாவும், சசிகலாவும் தனது கன்னத்தில் அறைந்ததாக பாராளுமன்றத்தில் கதறி அழுது பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா. அதன்பின் டெல்லியில் மட்டுமே முகாமிட்டிருந்த அவர் தமிழக அரசியலில் தலை காட்டவே இல்லை.

இந்நிலையில் தற்போது திடீரென அவர் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மக்கள் பிரச்சனையை தீர்க்கும் ஒரே கட்சி என்பதாலும், தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதாலும் தான் பாஜகவில் இணைந்ததாக அவர் பேட்டியளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக அரசை தமிழகத்தில் உருவாக்க தொண்டர்களில் ஒருவராக பாடுபடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News