Categories: Cinema News latest news

சுதீப் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?…தமிழ் நடிகர்கள் பார்த்து கத்துக்குங்கப்பா!..

பாலிவுட்டுக்கு பின் கோலிவுட்டில்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரஜினிகாந்த் ரூ.100 கோடியை தாண்டிவிட்டார்.

இதையும் படிங்க: 3 கதைகள் ரெடி!.. இளம் இயக்குனரை டீலில் விட்ட ரஜினி…காத்திருந்தது வீணாப்போச்சே!….

அவருக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். விஜய் ரூ.80 கோடி சம்பளம் பெறுகிறார். அவருக்கு பின் அஜித் ரூ.65 கோடி வரை சம்பளம் பெறுகிறார். சிவகார்த்திகேயன் ரூ.25 கோடியும், தனுஷ் ரூ.15 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர்.

ஆனால், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சினிமா நடிகர்கள் இவ்வளவு சம்பளம் பெறுவதில்லை. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த பாகுபலி படத்தில் நடிக்க ரூ.20 கோடிதான் பெற்றார் பிரபாஸ்.

இப்படத்திற்காக 4 வருடங்கள் நடித்தார் பிரபாஸ். மலையாளத்தில் மோகன்லால் 5 லிருந்து 8 கோடி வரையும்,, மம்முட்டி 4 லிருந்து 5 கோடி வரையும் சம்பளம் பெறுகின்றனர்.

இதில், கன்னட நடிகர் சுதீப் ரூ.12 கோடி சம்பளம் பெறுகிறார். இத்தனைக்கும் அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரூ.75 கோடி வரை வசூல் செய்கிறது. அதில் 20 சதவீத சம்பளத்தை கூட அவர் வாங்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

சுதீப் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். நான் ஈ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு ஒப்பிட்டால் தமிழ் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்!…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா