எனக்கு சம்பளமே தரல.... பராசக்தி தயாரிப்பாளர் மீது சுதா கொங்கரா வழக்கு!
மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி படைத்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ராசிகளின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் இயக்குனர் மணிரத்தினத்திடம் 7 வருடங்கள் துணை இயக்குனர் ஆகப் பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தமிழில் சூரரைப் போற்று, பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இதில் பராசக்தி திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் தனக்கு சம்பளமே கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் மீது சுதா கொங்கரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

1960ல்இல் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்து விட்டது. எனவே படத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என பராசக்தி படத்தின் இயக்குனர் இயக்குனர் மீது சுதாகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் .
அது மட்டும் இல்லாமல் சம்பள பாக்கி வழங்கும் வரை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இதய முரளி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இதனால் இதயம் முரளி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? என்ற ஒரு சந்தேகத்தில் இருக்கிறது. மிகப்பெரிய இயக்குனராக பெயர் எடுத்த சுதா கொங்கராவுக்கே சம்பள பாக்கியா? என திரைத்துறையில் சலசலப்பு நிலவி வருகிறது.
