துருவ் விக்ரமை இயக்கும் சுதா கொங்கரா
பராசக்தி படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்க்லத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.
துரோகி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் சுதா கொங்கரா. முதல் படம் வெற்றியை பெறாத நிலையில் அவரது இரண்டாவது படமான மாதவன் நடித்த இறுதி சுற்று மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து சூர்யா நடித்த சூரரைப் போற்று திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சூரரைப் போற்று வெற்றிக்குபின் அதே காம்போவில் புறநானுறு என்ற படம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக சூர்யா விலக சிவ்கார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற பெயரில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது.
இந்த நிலையில் சுதா கொங்கராவின் அடுத்த படம் என்ன என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். பராசக்தி போன்றே இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
துருவ் நடிக்கும் இந்தப் படத்தை முதலில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரிக்க முன்வந்தன.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது இந்த நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுதா கொங்கரா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
