×

சுதா கொங்கராவின் அடுத்த படம்... ஹீரோ யார் தெரியுமா?...

 

இயக்குனர் மணிரத்னத்திடம் 7 வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்த சுதா கொங்கரா, இறுதிச்சுற்று மூலம் கவனம் ஈர்த்தார். அதன்பின், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்த இயக்கினார்.

இப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரரைப்போற்று படத்திற்கு பின் கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவரின் இயக்கத்தில் அஜித் நடிக்க விரும்பியததும், அவரை அழைத்து பேசியதும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், வலிமை படத்தை முடித்து வருதற்குள் கார்த்தியின் படத்தை சுதா கொங்கரா முடித்து விடுவார் எனத் தெரிகிறது.

கார்த்தியை வைத்து இயக்கும் படமும் ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டது எனக்கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News