×

ஒத்த சொல்லு போதும்... உருகிய ரசிகர்கள்! சம்யுக்தாவிற்கு ஆர்ம்மி ரெடி ஸ்டார்ட்?

பிக்பாஸின் நேற்றைய நிகழ்ச்சியில் சம்யுக்தா கார்த்திக், ரேகா, சனம் ஷெட்டி, கேப்ரியலா ஆகிய 4 பேர் எவிக்ஷன்க்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். 
 

இவர்களில் யாரை பிக்பாஸ் வெளியேற்ற போகிறார் என்பது தெரியவில்லை. இல்லை நீங்கள் நால்வருமே உள்ளே இருக்கலாம் என சர்ப்ரைஸ் அளித்தாலும் அளிக்கலாம்.

நேற்றும் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டனர். இதில் சம்யுக்தாவின் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. தான் மாடலிங் துறையில் நுழைய பட்ட கஷ்டங்களையும், மகனையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி குறித்தும் இயல்பாக எடுத்து உரைத்தார். 

நான் சூப்பர் மாடல் கிடையாது சீனியர் மாடல் என பஞ்ச் பேசிய சம்யுக்தா, ஒரு பொண்ணு ஜீன்ஸ் போட்டாலும், புடவை கட்டினாலும் பொண்ணு பொண்ணு தான்.

ஒரு பொண்ணுக்கு எப்பவுமே லைஃப் சேலஞ்சிங் தானா இருக்கும் என அழகாக முற்றுப்புள்ளி வைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரொம்ப தெளிவா பேசுறாங்க இவங்களுக்கு ஒரு ஆர்மிய ஸ்டார்ட் பண்ணி நாம அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்  என கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ நாங்க ஆல்ரெடி ஸ்டார்ட் பண்ணிட்டோம் பாஸ் வந்து பாலோ பண்ணுங்க என சக ரசிகர்களுக்கு ரெக்வஸ்ட் கொடுத்து வருகின்றனர்.
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News