×

இந்த இளம் வயதில் தற்கொலையா? மெரினா பட நடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மெரினா படத்தில் நடித்த நடிகர் தென்னரசு குடும்ப பிரச்சனைக் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மெரினா படத்தில் நடித்த நடிகர் தென்னரசு குடும்ப பிரச்சனைக் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் மெரினா கடற்கரையில் பல்வேறு வேலைகள் செய்யும் சிறுவர்களின் வாழ்க்கையைக் காட்டியிருப்பார். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தென்னரசு. அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதில் நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். ஆனால் அந்த படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளுக்கு பெரியவாய்ப்புகள் எதுவும் இல்லை.

இந்நிலையில் அதுபோலவே தென்னரசுவுக்கும் சினிமாவில் அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இதற்கிடையில் அவருக்கு பவித்ரா என்ற பெண்ணோடு திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தம்பதிகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள நொச்சி குப்பத்தில் வசித்து வந்துள்ளனர்.

வாய்ப்புகள் இல்லாததால் குடிக்க ஆரம்பித்த தென்னரசு அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில் மன விரக்தியில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News