×

மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சுஜா வருணி - சூப்பர் கியூட் ஸ்டில்ஸ்!

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அனைவரது வீடுகளுக்கும் பாசமகளாக, செல்லத் தங்கையாக சென்று சேர்ந்தவர் சுஜா வருணி. கமல்ஹாசனே இவரை மகளாக ஏற்றுக் கொண்டார். இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பின்தொடரும் தனது ரசிகர்களை அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு அவர்களுடன் உரையாடியும் வருகிறார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை  கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

அதையடுத்து திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மகன் ஆத்வைத்தின் முதல் பிறந்தநாளை  வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆசீர்வாதத்தை பெற்று வருகிறார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News