×

சுல்தான் டீசரால் ட்ரோல் செய்யப்படும் கார்த்தி... என்னாப்பா விஷயம்
 

கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் சுல்தான் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
 

ஜோதிகாவுடன் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியாகிய படம் தம்பி. இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் சுல்தான் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. தளபதி மாஸ்டர் கொடுத்த நம்பிக்கையில் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 

இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர் கலவையான விமர்சனங்களையே பெற துவங்கி இருக்கிறது. அலெக்ஸ் பாண்டியன், தேவ் போன்ற கதையமைப்பில் இருப்பதாக நெட்டிசன்கள் ட்வீட்டை தெறிக்க விடுகின்றனர். மற்ற சிலரோ பரவாயில்லை லெவலுக்கு பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2-ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News