×

ரசிகர்களை ஏமாற்றிய சுல்தான் - இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?..

 
ரசிகர்களை ஏமாற்றிய சுல்தான் - இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?..

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நந்தனா, லால், நெப்போலியன் உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று வெளியான திரைப்படம் சுல்தான். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றதோடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஆனால், படம் வெளியான பின் ரசிகர்களிடம் சுல்தான் வரவேற்பை பெறவில்லை. இணையதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில், படம் தெலுங்கு படம் போல இருக்கிறது என்கிற கருத்து பரவலாக எழுந்தது. கதையும் பெரிதாக கவரும்படி இல்லை. அதாவது புதிதாக இல்லை. விவசாய நிலத்தை அபகரிக்கும் நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து கார்த்தி எப்படி விவசாயத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இதே கதையுடன், ஜெயம்ரவி நடிப்பில் வெளியான  ‘பூமி’ திரைப்படம் ரசிகர்களை கவராமல் போனது. விவசாயத்தை பாதுகாப்பது அவசியம்தான் என்றாலும் திரைக்கதையாக எப்படி ரசிக்கும் படி சொல்வது என்பதில்தான் இயக்குனர்கள் கோட்டை விடுகின்றனர்.  அதே தவறை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும் செய்துள்ளார். 100 ரவுடிகளை அழைத்து வந்து கார்த்தி விவசாயத்தை காப்பாற்றுகிறார் என்பது வித்தியாசம் என இயக்குனர் நினைத்துவிட்டார் போலும்

சுல்தான் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த ஒரு தெலுங்கு மசாலா திரைப்படமாகவே உருவாகியுள்ளது. கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் அந்த ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அனைத்து காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படம் தெலுங்கு ரசிகர்களை வேண்டுமானால் கவரலாம். ஆனால், தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு.

கைதி, கடைக்குட்டி சிங்கம் என நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கார்த்தியா சுல்தான் படத்தை தேர்ந்தெடுத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என பெரும்பாலான சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு, ரசிகர்கள் எக்ஸ்பிரசன் குயின் என அழைக்கும் ராஷ்மிகா மந்தனாவையும் இப்படத்தில் இயக்குனர் வீணடித்துள்ளார். காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவரவில்லை. 

sulthan

தெலுங்கு பட மசாலாக்களை விரும்பும் சில குறிப்பிட்ட ரசிகர்களை இப்படம் கவரலாம். மொத்தத்தில் அனைத்து தரப்பட்ட ரசிகர்களை கவர சுல்தான் தவறிவிட்டதே நிஜம்...
 

From around the web

Trending Videos

Tamilnadu News