Categories: Cinema News latest news

தனது குருவையே ஓவர் டேக் செய்து மாஸ் காட்டும் அட்லி… வேற லெவல் சம்பவமா இருக்கே!..

“ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அட்லி, தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரியாமணி போன்ற தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

Jawan

“ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து அட்லி, விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Cable Shankar

இந்த நிலையில் இயக்குனர் கேபிள் ஷங்கர், தனது வீடியோ ஒன்றில் அட்லி குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து இயக்கும் படத்திற்காக அட்லிக்கு அதிகளவு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது இயக்குனர் ஷங்கரின் சம்பளத்தை விட 25 சதவிகிதம் அதிகமாக சம்பளம் கொடுக்க முடிவெடுத்துள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். இவ்வாறு அந்த வீடியோவில் கேபிள் ஷங்கர் கூறியுள்ளார்.

Atlee and Shankar

“ஜவான்” திரைப்படத்திற்காக அட்லி 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஷங்கர் தற்போது 40 கோடியில் இருந்து 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அட்லி, ஷங்கரை விட 25% அதிக சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளிவருகிறது. அட்லி, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இவுங்க படம் எடுக்குற மாதிரி தெரியலயே… நேரத்தை வீணடிக்கும் பிரசாந்த்… பங்கமாய் கலாய்த்த பிரபல தயாரிப்பாளர்…

Arun Prasad
Published by
Arun Prasad