×

அடிமடியில் கைவைத்த சன் பிக்சர்ஸ்… அதனால்தான் வெளியேறினாரா முருகதாஸ்?

நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து இயக்குனர் முருகதாஸ் விலகியதற்கு முக்கியக் காரணம் அவரின் சம்பளத்தில் கைவைத்ததுதானாம்.

 

நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து இயக்குனர் முருகதாஸ் விலகியதற்கு முக்கியக் காரணம் அவரின் சம்பளத்தில் கைவைத்ததுதானாம்.

துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக விஜய் 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஆர் முருகதாஸ். ஆனால் திடீரென சில வாரங்களுக்கு முன் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியக் காரணம் முருகதாஸின் சம்பளப் பிரச்சனைதானாம்.

முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்துக்கு அவருடைய சம்பளம் 30 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் விஜய் படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து மேலும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சொல்லியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதற்கு முருகதாஸ் ஒத்துக்கொள்ளாததால் தான் படத்தில் இருந்து விலகினாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News