Categories: latest news

மருமகள் முதல் மூன்று முடிச்சு சன் டிவி தொடர்களின் புரோமோ அப்டேட்…

Sun tv: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களான மருமகள், சுந்தரி,  மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ குறித்த தொகுப்புகள்.

சுந்தரி: ஆசிரமத்திற்கு வரும் வெற்றியை சுந்தரி தன்னுடைய வருங்கால கணவர் என  அறிமுகம் செய்து வைக்கிறார். ஜானகி தனக்கு தெரியும் எனக் கூற எப்படி என கேட்கிறார் சுந்தரி. கார்த்தி மற்றும் அனு கண்ணை கட்டி விளையாடி கொண்டிருக்க அதை அனு அம்மா பார்த்து இங்கு கார்த்தி எப்படி என யோசித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 139 படத்தில் ஹீரோ அப்பா… 13 வருடத்தில் 36 படம் நடித்த ஹீரோ மகன்… யார் தெரிதா?

மருமகள்: ஆதிரை தற்போது அவருக்கு என்மேல்தான் கோபம் என்கிறார். பிரபு தன்னுடைய அப்பாவிடம் இப்போ ஆதிரை சொல்வது பொய்யா? இல்ல நீங்க சொல்வது பொய்யா? என கேள்வி கேட்கிறார். ஆதிரை பிரபுவுடன் எனக்கு மனதில் தனி கொடுத்து நம் ஆசை எல்லாம் இல்லை எனக் கூறிவிடுகிறார்.

மூன்று முடிச்சு: சாமி படத்தின் முன் நிற்கும் நந்தினி இனி இந்த வீட்டில் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என பேசிக் கொண்டிருக்கிறார். சூர்யாவிடம் நந்தினி அக்கா நீ கட்டின தாலியை மதிச்சு அவ இந்த வீட்டில் இருக்கா. அதை தூக்கிப் போட்டுட்டு போக எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்கிறார். சூர்யா பூ வாங்கிக் கொண்டிருக்க இதை யாருக்கு என பூ விற்பவர் கேட்கிறார். என் பொண்டாட்டிக்கு என கூற  நந்தினி அதை கேட்டு விடுகிறார்.

இதையும் படிங்க: திட்டம்போட்டு காலி பண்ணிட்டாங்க!.. கங்குவா படத்துக்கு நேர்ந்த கதி?!.. தியேட்டர் ஓனர் சொன்ன தகவல்!..

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily