Categories: latest news

சன் டிவியின் டாப் 5 டிஆர்பி சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்… என்ன நடக்கும் தெரியுமா?

Sun serials: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் 5 தொடர்களான கயல், சுந்தரி, மருமகள், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு தொடர்களில் இன்று நடக்க இருக்கும் புரோமோ அப்டேட்.

கயல்: பெரியப்பாவை பார்க்க வரும் கயல் வேறொரு முக்கியமான விஷயத்திற்கு வந்ததாக கூறுகிறார். எழில் நம்ம ரெண்டு பேரும் பல நூறு வருஷம் வாழனும் என்கிறார். கயல் இனி நமக்குள் எந்த பிரச்சினையும் யாராலும் வராது எனக்கு கூற புது கேரக்டர் ஒன்று என்ட்ரி ஆகிறது.

இதையும் படிங்க: சூர்யாவின் பாலிவுட் கனவை காலி செய்த கங்குவா!.. என்ன ஆச்சுனு இம்புட்டு பண்ணுறீங்க?

சுந்தரி: அனு மற்றும் கார்த்திக் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன தப்பு செஞ்சீங்க என அனு கேட்க, என்னை தப்பு செய்ய வைத்து விட்டதாக கூறுகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுந்தரியிடம் கந்து வட்டி கண்ணன் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அனுவிடம் கார்த்திக் அழுது கொண்டு இருக்கிறார். 

மருமகள்: வேல்விழி அவருடைய அம்மாவிடம் எனக்கு நீ அம்மாவும் இல்லை நான் உனக்கு பொண்ணும் இல்லை என கூறிவிடுகிறார். ஆதிரை என் பொண்ணு இல்ல பொக்கிஷம். அவரை நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் மாப்பிள்ளை என ஆதிரை அப்பா பிரபுவிடம் கூறுகிறார். சித்தப்பா இந்த வீட்டு பக்கம் வராதே என துரத்திவிடுகிறார். 

இதையும் படிங்க: படம் சுமாராவே இருக்கட்டும்! அதுக்கு இப்படியா? ‘கங்குவா’ விமர்சனத்தால் ஆவேசமான திருப்பூர் சுப்பிரமணியன்

சிங்கப்பெண்ணே: அன்புவின் தங்கை ஆனந்தி மீது காதல் இல்லாம தான் அவர் படுத்து தூங்கின தலைவாணி உறையை பங்களாதேஷ் எடுத்துச் செல்கிறாயா எனக்கு கேட்கிறார். ஆனந்தி தன் தோழியிடம் அழுக கூடாது தான் பார்க்கிறேன். ஆனா அழுகை வருவதாக கூறுகிறார். கம்பெனியில் இருப்பவர் அழகன் அன்பு தான் என கூறிவிடலாம் என செல்லும்போது ஆனந்தியின் மொபைல் போன் அடிக்கிறது.

மூன்று முடிச்சு: நந்தினி வீட்டில் இருக்க இருவர் வந்து சூர்யா வர சொன்னதாக கூறுகின்றனர். நந்தினியும் அவர்களை உள்ளே விடுகிறார். மாதவி மற்றும் சுந்தரவள்ளி உள்ளிட்டோர் வீட்டிற்கு வர வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணம் இல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily