Categories: Cinema News latest news

TRP ரேட்டிங்கில் விஜய் டிவியை தூக்கி சாப்பிட்ட சன் டிவி…

தமிழ் டிவி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளை போட்டி போட்டு கொண்டு டெலிகாஸ்ட் செய்து வருகின்றன டிவி சேனல்கள்.வித விதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டாலும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிவது 2 வகை நிகழ்ச்சிகள் தான்.ஒன்று கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள், இன்னொன்று சீரியல்கள்.

பல சேனல்கள் சீரியல்கள் இருந்தாலும் நேரடி போட்டி என்னவோ ரசிகர்களின் அபிமானம் பெற்ற 2 சேனல்களுக்கு மத்தியில் தான்.சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவிக்கு தான் போட்டி அதிகம்.

பல சூப்பர் ஹிட் சீரியல்கள் இந்த 2 சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகின்றன. பெரும்பாலும் TRP ரேட்டிங் லிஸ்ட்டில் டாப் 10 இடங்களில் டாப் 5 லிஸ்ட்டில் இந்த சேனல்களின் 2 சீரியல்களாவது மாறி மாறி இடம் பெற்றுவிடும்.

இந்நிலையில் தமிழ் சீரியல்களின் கடந்த வார TRP ரேட்டிங் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.இதில் அதிர்ச்சி தர கூடிய விஷயம், டாப் 5 லிஸ்ட்டில் விஜய் டிவி-யின் ஒரே ஒரு சீரியல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதுவும் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் உள்ள சன் டிவியின்  தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாமிடத்தில் சுந்தரி, மூன்றாம் இடத்தில் வானத்தை போல, நான்காம் இடத்தில் ரோஜா உள்ளிட்ட சன் டிவி சீரியல்கள் உள்ளன. டாப் 5 லிஸ்ட்டில் 5-ஆம் இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல்.

Vel Murugan
Published by
Vel Murugan