Jananaygan: ஜனநாயகன் படத்தை சன் டிவி வாங்கிவிட்டதா?!... உண்மை என்ன?...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் இது அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. எனவே, வியாபாரரீதியாகவும், ரசிகர்களிடமும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தளபதி கச்சேரி பாடல் லிரிக் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
ரிலீஸுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் படக்குழு புரமோஷன் வேலையை துவங்கியிருக்கிறது. அதன் தொடர்பாகவே இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. ஒருபக்கம்,
ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் படத்தின் வியாபாரம் 350 கோடியை தாண்டி விட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள தியேட்டர் ரிலீஸ் உரிமை 115 கோடிக்கு விலை போயிருக்கிறது. இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இந்த அளவுக்கு விலை போனதில்லை. மேலும் ஆடியோ ரைட்ஸ், ஹிந்தி சேட்டிலைட் உரிமை போன்றவை பல கோடிக்கு விலை போயிருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இந்நிலையில்தான் ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கி இருப்பதாக சமீபத்துகள் செய்திகள் வெளியானது. பலரும் இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்யும் விஜய் அவர்களுக்கு நெருக்கமான சன் நிறுவனத்திற்கு எப்படி தனது படத்தை கொடுக்க அனுமதித்தார். அரசியல் வேறு? தொழில் வேறா?’ என்றெல்லாம் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் உண்மையில் ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கவில்லை. விஜய் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். திமுகவுக்கு நெருக்கமானவர் கலாநிதி மாறன். அப்படி இருக்கும்போது இந்த படத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். இது விஜய்க்கும் தெரியும். ஜீ தமிழ் அல்லது விஜய் டிவி இதில் ஏதேனும் ஒன்றுதான் ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்க போகிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
