Categories: latest news

சன் டிவி சூப்பர் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் அப்டேட்… இத பாருங்க!..

Sun serials: டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவியின் ஐந்து சீரியல்களின் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் புரோமோ தொகுப்புகள்.

மருமகள்: ஆதிரை எந்த விஷயமாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் சொல்லுங்கள் என்கிறார். பிரபுவின் அப்பா பேசவர அந்த நேரத்தில் பிரபு அங்கு வந்து விடுகிறார். இரவு பிரபு மற்றும் ஆதிரை பேசிக் கொண்டிருக்க நம்ம வாழ்க்கையை புது வீட்டில் தொடங்குவோம் என கூறுகிறார். உடனே ஆதிரை இதுதான் மாமாவும் சொல்ல நினைத்திருப்பாரோ என நினைக்கிறார். பால் காய்ச்சுவதற்கு எங்க அப்பாவை கூப்பிட வேண்டும் என்கிறார்.

இதையும் படிங்க: விவாகரத்துக்கு காரணம்!… சாய்ரா பானுவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

சுந்தரி: கார்த்திக் அனுவிடம் உங்க குரல் என்னுடைய அனுவோட குரல். உங்களுக்கு வேண்டுமென்றால் அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது உயிர் என்கிறார். தாத்தா ஒருவர் வந்து அனுவிடம் கலெக்டர் வந்திருப்பதாக கூறுகிறார். உடனே கார்த்திக் வெற்றிக்கு கால் செய்து சுந்தரி இங்கு வந்திருப்பதாக கூறுகிறார்.

சிங்கப் பெண்ணே: கருணாகரன் ஆனந்தியிடம் போனை கேட்க அவரை தள்ளி விட்டு விடுகிறார். அன்பு மகேஷுக்கு கால் செய்து தான் கிளம்புவதாக கூறுகிறார். ஆல் தி பெஸ்ட் என மகேஷ் கோபமாக கூறுகிறார். ஆனந்தி ஒரு செயினை எடுத்து இது அழகன் கொடுத்ததே என பார்க்கிறார். அதில் ஆனந்தி மற்றும் அன்பு புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 

இதையும் படிங்க: கங்குவாவ எப்படியாச்சும் காப்பாத்து சாமி!.. சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!…

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily