Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே... கவர்ந்திழுத்த சுனைனா!

நகுலிற்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நேச்சுரலான நடிகை என பெயரெடுத்த சுனைனா தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். ஆம், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.
இந்நிலையில் சுனைனா அழகிய ட்ரடிஷனல் உடையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துள்ளார். Black & White போட்டோ பார்த்து தான் இன்னும் மனசு முழுக்க குஷி ஆகிட்டாங்க நம்ம புல்லிங்கோ...