பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, ராஷி கன்னா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் லேசாக வில்லனாக நடித்து கோலிவுட் பக்கம் எட்டிப் பார்த்தார். அதன் பின்னர் மீண்டும் இந்திக்கு சென்ற அவருக்கு பெரிதாக படங்கள் ஏதும் அமையவில்லை.
மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்புவோம் என நினைத்த அவர் விஜய்யின் லியோ படத்தில் ஒரு சீன் கொடுத்தாலும் சாகத் தயார் என வான்டட்டாக வந்து லியோ தாஸ் கையால் குண்டு வாங்கி இறந்தது போல ஒரு சீன் நடித்தார்.
இதையும் படிங்க: கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!
அதன் பின்னராவது பாலிவுட் பக்கம் போவார் என பார்த்தால் மகாராஜா படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என ஆரம்பித்த அவர் தற்போது கோலிவுட்டிலேயே பாய் விரித்து படுத்தே விட்டார் என்கின்றனர்.
மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கும் அனுராக் காஷ்யப்புக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், அடுத்ததாக திரிஷாவை வைத்து பரமபதம் எனும் படத்தை இயக்கிய இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள ஒன் டு ஒன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு சுத்தமா நன்றியே இல்லையே?.. ஒரு பக்கம் ரஜினிகாந்த்!.. இன்னொரு பக்கம் ஜெய்பீம் இயக்குநர்!
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் தமன்னா மற்றும் ராஷி கன்னா தயவால் மிகப்பெரிய வெற்றியை பெற்று விட்டது. அந்த வேகத்தில் தற்போது இந்த படத்தை சேல் பண்ணி வெளியிடலாம் என்கிற திட்டத்துடன் இந்த ஒன் டு ஒன் படத்தை இறக்க திட்டமிட்டுள்ளார்.
சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் இருவரும் ஒண்டிக்கு ஒண்டி மோதும் படத்துக்கு ஒன் டு ஒன் என டைட்டில் வைத்துள்ளனர். இருவரும் சண்டை போடும் காட்சிகளும் சுந்தர் சி கெட்ட வார்த்தையில் டிரெய்லருக்காக திட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: இந்தியன் சினிமாவிலேயே சாதனை படைத்த ‘கல்கி’! விமர்சனத்தையும் தாண்டி என்னெல்லாம் இருக்கு பாருங்க
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…