சும்மா இருந்தவர கத்தியை எடுக்க வச்சிராதீங்கடா! ‘ரஜினி 173’ல் சுந்தர் சிக்கு இருக்கும் ரிஸ்க்
ரஜினி அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இணையும் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறார்கள். இப்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக சுந்தர் சியுடன் இணைய இருக்கிறார் ரஜினி.
இந்த அறிவிப்பு வெளியானது நெட்டிசன்கள் இந்த கூட்டணியை பற்றி மீம்ஸ்களாக வெளியிட்டு வந்தனர். அதாவது இது அரண்மனை 5ஆகத்தான் இருக்கும் என்று கூறி வந்தனர். இது பற்றி வலைப்பேச்சு அந்தணன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதாவது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சியும் ரஜினியும் இணைகிறார்கள். கத்தி, வன்முறை என டிரை ஆன படங்களிலேயே நடித்து நடித்து ரஜினிக்கு போர் அடித்துவிட்டது.
அதனால் கொஞ்சம் நாமும் ப்ளாஷ்பேக்குக்கு போய் வரலாமே என ரஜினி நினைத்துவிட்டார் போல. அதுக்கு சுந்தர் சிதான் சரியான ஆளு. எல்லாம் கலந்த கலவையாகயும் சுந்தர் சி இருக்கிறார். காமெடி, செண்டிமெண்ட், கலாட்டா, ஆக்ஷன் என என்ன வேணுனாலும் அவரிடம் இருக்கும். அதனால் எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாகத்தான் சுந்தர் சியும் எடுப்பார்.
ஆனால் சில ரசிகர்கள் வன்முறை சார்ந்த படங்களையே பார்த்து பார்த்து பழகியிருக்கின்றனர். ஒரு வேளை சுந்தர் சி ரஜினியை வைத்து எடுக்கும் படம் தோல்வி அடைந்து ‘சரி.. அப்போ நமக்கு வன்முறை சார்ந்த படம்தான் கரெக்டா இருக்கும்’ என ரஜினி மீண்டும் லோகேஷ், நெல்சன் என இவர்களை நோக்கி போய்விட்டால் வன்முறைதான் சரி என சமூகத்திற்கு ஒரு தவறான பாதையை காட்டுவது போல அமைந்து விடும்.
இதனால் சுந்தர் சியும் லோகேஷ் நெல்சன் மாதிரி அவரும் அவர்களுடைய பாணியை ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிடுவார். ஆனால் சமுதாயம் வேறொரு பாதையை நோக்கி பயணித்து வருகிறது. இதை மாற்ற வேண்டுமென்றால் சுந்தர் சி மாதிரியான இயக்குனர்களால்தான் முடியும். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் அவருடைய பாதையை மாற்றி விட்டால் இந்த சமுதாயத்தை நம்மால் திருத்தவே முடியாது என அந்தணன் கூறியுள்ளார்.
