Categories: Cinema News latest news

அந்த க்ளைமாக்ஸால என் வாழ்கையையே தொலைச்சிருப்பேன்…! விட்டதை பிடிச்சு வெற்றிகண்ட சுந்தர் சி..

தமிழ் சினிமாவில் கமெரிஷியலான படங்களை நகைச்சுவை மூலம் கொடுத்து வெற்றிகண்ட் இயக்குனர்களில் சுந்தர்.சியும் ஒருவர். அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன், சுயம்வரம், போன்ற படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் களம் இறங்கி நல்ல நல்ல படங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார்.

அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 2 படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா மோத்வானி, சுந்தர்.சி, சூரி உட்பட பலரும் நடித்திருந்த இந்த படம் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இருந்தது. இந்த நிலையில் இவர் மிகவும் பயந்த படமும் அரண்மனை 2 படம் தான் என கூறியுள்ளார்.

ஏனெனில் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் குடும்பத்தோடு இரவு இந்த படத்தை போட்டு பார்த்தாராம். பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டாராஅம். ஏனெனில் க்ளைமாக்ஸில் அந்த பாடலில் பாடல் சத்தம் குறைவாகவும் ஸ்கிரீன் கலர் பளிச்சென்றும் இருந்ததாம். இதை பார்த்ததும் நாம காலிதான் என எண்ணினாராம். ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி ஏற்பட்டதாம். அதன் பின் அதை சரிசெய்து படத்தை ரிலீஸ் செய்தார்களாம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini