1. Home
  2. Latest News

Thalaivar 173: சுந்தர்.சிக்கு 2 மடங்கு சம்பளம்!.. தலைவர் 173 பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?!..

thalaivar173

நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்க போகிறார் என்கிற செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இளம் இயக்குனர்களுடன் பயணித்து வந்த ரஜினி சீனியர் இயக்குனரான சுந்தர்.சி-யை டிக் அடித்து ஆச்சரியம் கொடுத்திருக்கிறார்.

கடந்த பல வருடங்களாகவே ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளை கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து விட்டதால் சலித்து போய்தான் ரஜினி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. ரஜினியும் சுந்தர்.சி யும் 28 வருடங்களுக்கு முன்பு அருணாச்சலம் படத்தில் இணைந்தனர். சுந்தர்.சியோ காமெடி படங்களை எடுப்பவர். எனவே, ரஜினியை வைத்து சுந்தர்.சி இயக்கப் போகும் படம் அரண்மனை சீரியஸ் போல ஒரு ஹாரர் காமெடி படமாக இருக்கும் என்றெல்லாம் சிலர் மீம்ஸ் போட்டு கிண்டலடிடுத்து வருகிறார்கள்.

sundar c

இந்நிலையில்தான் இந்த படம் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. இந்த படம் ரஜினியின் சம்பளத்தோடு சேர்த்து சுமார் 275 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறதாம். இதில் சுந்தர்.சிக்கு மட்டும் 30 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு சுந்தர்.சி வாங்கிய சம்பளம் 15 கோடி மட்டுமே. ரஜினி படம் என்பதால் இரண்டு மடங்காக சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி சம்பளம் கொடுத்த நிலையில் சுந்தர்.சி-க்கு 30 கோடி தாராளமாக கொடுக்கலாம் என கமல் நினைத்திருக்கலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்கிறார்கள். அதோடு 2027 ஜனவரி பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அவர்கள் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.