ரஜினி, விஜய்லாம் ஓரம் போங்க.. ஓப்பனிங்னா என்னனு நிரூபிச்சுட்டாரு சுந்தர் சி

by Rohini |
sundar c
X

இதுதான் ஓப்பனிங்: ஓப்பனிங் என்றாலே அது ரஜினி மற்றும் விஜயின் படங்களுக்குத்தான் என்ற ஒரு நிலை தமிழ் சினிமாவில் உருவாகி இருக்கிறது .ஆனால் இதையெல்லாம் தாண்டி சுந்தர் சிக்கும் இப்போது நல்ல ஒரு ஓபனிங் இருப்பதாக தெரிகிறது. அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜ ராஜா. இந்த படம் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படங்களில் சில விஷயங்கள் இருப்பதால் மக்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் .

சுந்தர் சினாலே வெற்றிதான்: அதுவும் பொங்கலுக்கு ஒரு நல்ல ட்ரீட்டாகவே மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. 2 மணி நேரம் வயிறு குலுங்க சிரித்து இந்த படத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு படம் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் ஹிட் படமாகவும் மதகஜராஜா திரைப்படம் அமைந்திருக்கிறது. இதைப்போல கடந்த வருடமும் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் தான்.


வசூல் வேட்டை: 2024 ஆம் ஆண்டு வெளியான எந்த ஒரு திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. ஏன் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகியும் கூட அந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. தமிழ் சினிமா அவ்வளவுதான் என்ற ஒரு பேச்சே இருந்தது. அப்படி இருக்கும் சூழலில் தான் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வருகையால் அந்தப் படத்தின் வசூல் அதிகரித்தது.

அதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்ற பெயரையும் அரண்மனை 4 திரைப்படம் பெற்றது. அதைப்போல தான் இந்த வருடமும் முதல் ஹிட் படம் மதகஜராஜா திரைப்படமாக அமைந்துள்ளது. இதன் மூலம் சுந்தர் சி மீது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் அவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதும் ரசிகர்களின் பார்வை திரும்பி இருக்கிறது.


அடுத்ததாக சுந்தர் சி கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படமும் ஒரு முழு நீள காமெடி திரைப்படம் தான் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதனால் அந்தப் படமும் மக்களுக்கு திருப்திப்படுத்தக்கூடிய படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இனி சுந்தர் சி காட்டில் மழை தான் என கூறி வருகிறார்கள்.

Next Story