மூக்குத்தி அம்மன் 2 பட பட்ஜெட் இவ்வளவு கோடியா?!.. சுந்தர்.சி போடும் பக்கா ஸ்கெட்ச்!...
Sundar C: தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. கடந்த 30 வருடங்களாக ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகிறார். சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான 95 சதவீத திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்று கொடுத்துள்ளது.
கார்த்திக், கவுண்டமணி, ரம்பாவை வைத்து இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சுந்தர்.சி. படம் என்றாலே அதில் கவுண்டமணியின் காமெடி தூக்கலாக இருக்கும். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி வரும் எல்லா காட்சிகளுமே ரசிகர்களை சிரிக்க வைத்தது.
ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம், அஜித்தை வைத்து உன்னைத் தேடி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், எல்லாமே ஒரு படம்தான். அதன்பின் பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைக்கவில்லை. விஜயை வைத்து படமெடுக்க பலமுறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு ஆர்யா, ஜெயம் ரவி, பாலிவுட் நடிகை இஷா பத்தானி உள்ளிட்ட பலரையும் வைத்து அதிக பட்ஜெட்டில் சங்கமித்ரா என்கிற ஒரு சரித்திரக்கதையை எடுக்க சுந்தர் சி திட்டமிட்டு படத்தின் அறிவிப்பும் வெளியானது. ஆனால், சில காரணங்களால் அப்படம் டேக் ஆப் ஆகவில்லை.
அதன்பின் சுந்தர் சி சினிமாவில் நடிக்க துவங்கி பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். படங்களை இயக்குவதையும் அவர் நிறுத்தவில்லை. 12 வருடங்களுக்கு முன்பு அவரின் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகாமல் இருந்த மதகஜராஜா படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் வேலையில் சுந்தர்.சி ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என சொல்லப்படுகிறது. சுந்தர் சிக்கு சம்பளம் 20 கோடி, நயன்தாராவுக்கு 10 கோடி, மீதமுள்ள 70 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. ஒரு சாமி படத்திற்கு எதற்கு இவ்வளவு செலவு என்றால், இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் சரித்திரக்கதை ஒன்று இடம் பெறுகிறதாம். அதற்குதான் அதிக பட்ஜெட் என்கிறார்கள்.
சங்கமித்ரா பட அறிவிப்பு வெளியானபோது ‘சுந்தர் சி-யால் எப்படி சரித்திர படத்தை இயக்க முடியும்?’ என பலரும் விமர்சனம் செய்தார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாகவே மூக்குத்தி அம்மன் 2-வில் பல காட்சிகளையும் அவர் எடுக்கவுள்ளாராம். இதன் மூலம் சங்கமித்ரா படத்தை தன்னால் இயக்க முடியும் என மறைமுகமாக சொல்லவிருக்கிறாராராம் சுந்தர்.சி.