ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் - ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?
ரஜினிகாந்த் - கமல்ஹாசனை இயக்கப் போகிறார் சுந்தர். சி என அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் இந்த படம் அருணாச்சலம் மாதிரி வருமா? அல்லது அன்பே சிவம் மாதிரி வருமா? என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினர். ஆனால், யார் கண் பட்டதோ படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வேண்டாம் என வெளியேறிவிட்டார் சுந்தர். சி.
மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிரடியாக வேட்பாளராக மதுரையில் பிடிஆரை எதிர்த்து போட்டியிட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படத்தை ஏன் இயக்கவில்லை என்கிற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
30 வருஷத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் சாரை அருணாச்சலம் படத்தில் இயக்கும் போது நிலைமை வேறு. அவருக்கு நான் சொன்ன குடும்ப பாங்கான காமெடி படத்தின் கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அவருக்கு வேறு விதமான படம் பண்ன வேண்டிய நிலை உள்ளது.
அதிக பிரஷர் காரணமாகவே படத்தில் இருந்து விலகிவிட்டேன். கண்டிப்பாக படம் எடுக்க ஆரம்பித்தாலும், பாதியில் வெளியேறும் சூழல் ஏற்பட்டால் அது நல்லா இருக்காதுன்னு நினைச்சுத்தான் வெளியேறினேன். வெளியேறுவதற்கு முன்பாக ரஜினி சாரிடம் என்னோட நிலைப்பாட்டை சொன்னேன். அவர் நீங்க எப்போ சொன்னாலும் உங்க கதையை பண்ணலாம் என சொல்லிவிட்டார் என்றார்.
சுந்தர். சிக்கு ரஜினிகாந்தின் மகள்களில் ஒருவர் தான் அழுத்தம் கொடுத்ததாக வதந்திகள் பரவிய நிலையில், அதெல்லாம் வதந்தி தான் என்பது சுந்தர். சியின் பதில் மூலம் தெரிந்துள்ளது. வரும் மே 4ம் தேதி சுந்தர். சி வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
