Categories: Cinema News latest news throwback stories

நான் ஆசைப்பட்ட மாதிரி நடக்கல.. அந்த படத்தோட சினிமாவ விட்டே போகலாம்னு இருக்கேன்! – சுந்தர் சி சொன்ன அதிர்ச்சி தகவல்!..

தமிழில் கமல் ரஜினி என பெரும் நடிகர்களை கொண்டு பல மாஸ் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. கமல் ரஜினி இருவருக்குமே இரண்டு வித்தியாசமான படங்களை கொடுத்தவர் சுந்தர் சி.

பொதுவாக திரைப்படங்களில் ஏழையாக இருக்கும் ரஜினி பணம் சம்பாதித்து பெரும் ஆளாக வருவது கதையாக இருக்கும். ஆனால் அருணாச்சலம் திரைப்படத்தில் சாதரண மனிதராக இருக்கும் அருணாச்சலம் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்து அழிக்க வேண்டும் என்பதே கதையாக இருக்கும்.

anbe sivam

அதே போல சுந்தர் சி கமலை வைத்து இயக்கிய சிறப்பான திரைப்படம் அன்பே சிவம். இப்போதும் கூட அந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு சுந்தர் சியின் திரைக்கதையே முக்கிய காரணமாக உள்ளது.

வாழ்நாள் ஆசை:

இதே போல நிறைய ஹிட் படங்களை சுந்தர் சி கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறும்போது பல நடிகர்களை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளேன். அவை எல்லாம் மக்களுக்கு பிடிக்கும் வகையில் படம் எடுக்க வேண்டும் என இயக்கிய திரைப்படங்கள்தான்.

ஆனால் சினிமாவில் படம் எடுப்பதில் எனக்கென்று ஒரு ஆசை உள்ளது. நான் ஆசைப்பட்ட மாதிரியான திரைப்படத்தை இன்னும் நான் எடுக்கவே இல்லை. அப்படி நான் ஆசைப்பட்ட ஒரு கதைதான் சங்கமித்ரா திரைப்படம். ஆனால் தற்சமயம் அந்த படத்தை தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

இருந்தாலும் அந்த படத்தை எடுத்து முடிப்பேன். சங்கமித்ரா திரைப்படத்திற்கு பிறகு டைரக்‌ஷனில் இருந்து ஓய்வு பெறலாம் என உள்ளேன் என கூறியுள்ளார் சுந்தர் சி.

Rajkumar
Published by
Rajkumar