என்னது 1000 கோடியா? ரஜினி அப்பவே சொன்னாரு.. சுந்தர் சி சொன்ன தகவல்

by Rohini |
sundar c
X

வெற்றிக்களிப்பில் சுந்தர் சி: தற்போது டிரெண்டிங்கில் இருப்பவர் சுந்தர் சி. 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை இப்போது ரீலீஸ் செய்து மக்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சுந்தர் சி. மதகஜராஜாவின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது அவரிடம் நிருபர்கள் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு பல வகைகளில் சுந்தர் சி பதில் கொடுத்திருக்கிறார். அந்த விவரம் இதோ:

1000 கோடியா?ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு கேள்வியைக் கேட்க அதற்கு சுந்தர் சி இப்படி எல்லாம் வாயை விட்டு நான் மாட்டிக்கிறதா இல்ல. படம் நல்லபடியாக ஜெயித்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தினால் அதுவே எனக்கு ஒரு பெரிய சாதனை. அதையும் மீறி கலெக்ஷன் என்பது என்னுடைய டிபார்ட்மெண்ட் கிடையாது. நான் வெறும் இயக்குனர் தான்.

என்னுடைய ஜானர் இதுதான்: நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும். அவங்களுக்கு புடிச்சதை நாம் தரவேண்டும். தியேட்டருக்கு வந்தால் குறைந்தது 15 நிமிடமாவது மனசு விட்டு அவர்கள் கவலை எல்லாம் மறந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. மற்றபடி வரவு செலவு கணக்கு எல்லாம் தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறினார். மேலும் எல்லா விதமான படங்களும் வரவேண்டும். அதில் எந்த வித மாற்ற கருத்துக்களும் கிடையாது.

ரஜினி சார் சொன்ன விஷயம்: ஆனால் என்னுடைய ஜானர் என்பது இதுதான். நான் ஒரு என்டர்டெய்னர். என்னை பொறுத்த வரைக்கும் மக்கள் இரண்டரை மணி நேரம் அவர்கள் நேரத்தை எல்லாம் விட்டு விட்டு வந்து பார்க்கிறார்கள். அதாவது சும்மா உட்காருவது என்பது கஷ்டம். ரஜினி சார் அப்பவே என்னிடம் சொன்னார். சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருக்கையில் ஐந்து நிமிடத்திற்கு மேல் சும்மா உட்காருவதே கஷ்டம். அப்படிப்பட்ட இயல்பு தான் மனித இயல்பு என ரஜினி சார் கூறினார்.


அதைப்போல ஒரு தியேட்டரில் ஒரு இருட்டு அறையில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் உட்காருகிறோம். அப்படி உட்கார வைப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனால் அந்த இரண்டரை மணி நேரம் நமக்கு டைம் கொடுத்து வருகிற மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை. அந்த வகையில் என்னுடைய படங்கள் எல்லாமே ஒரு சந்தோஷமான குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி படங்களாக அதுவும் ஒரு என்டர்டெயின்மென்ட் படங்களாக தான் இருக்க வேண்டும்.

அப்படித்தான் இதுவரை நான் எல்லா படங்களையும் எடுத்து வருகிறேன். இதை விட்டு ரூட் மாறி நான் போனால் கூட மக்களே என் தலையில் தட்டி உனக்குனு ஒரு இடம் கொடுத்து இருக்கோமே? உனக்குனு ஒரு லைஃப் கொடுத்திருக்கோமே என சொல்லி தட்டி ஒரு படத்தை தோற்கவைத்து மறுபடியும் என்னுடைய ஜானருக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். அதனால் இனி அடுத்து வரும் என்னுடைய கேங்ஸ்டர் படங்களாகட்டும் மக்களை மகிழ்விக்க கூடிய அவர்களுக்கு ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படங்களாக தான் இருக்கும் என கூறி இருக்கிறார் சுந்தர் சி.

Next Story