ரஜினிக்காக அந்த நடிகரை டீலில் விட்ட சுந்தர்.சி!.. பக்கா பிளான் போட்டு வீணாப்போச்சே!...
Thalaivar 173: சினிமாவில் ஒரு இயக்குனருக்கு பெரிய நடிகரின் படத்தை இயக்கம் வாய்ப்பு வந்தால் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு சின்ன நடிகரின் படத்தை தள்ளி வைப்பது வழக்கமான ஒன்றுதான். பல நடிகர்களுக்கும் இது நடந்திருக்கிறது.தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக காமெடி திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. சுந்தர்.சி-யின் படம் என்றாலே குடும்பத்துடன் சென்று ஜாலியாக சிரித்து விட்டு வரலாம் என்கிற இமேஜ் உருவாக்கி இருக்கிறார்.
குடும்ப காமெடி படங்கள் மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் ஹாரர் காமெடி படங்களையும் இயக்கி அதுலேயும் வெற்றி பெற்று காட்டினார் சுந்தர்.சி. இந்நிலையில்தான் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு வந்திருக்கிறது. ரஜினியின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்த படத்தை ரஜினியின் நம்பர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பை அறிவித்து விட்டார்கள்.

உண்மையில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு பின் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுந்தர்.சி. விஷாலும் மகுடம் படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சி படத்தில் இணையவிருந்தார். ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு பின் ரஜினி படத்தை துவங்க வேண்டிய நிலை. ஏனெனில் ரஜினி யாருக்காகவும் பொறுத்திருக்க மாட்டார். எனவே விஷால் படத்தை தள்ளி வைக்க சுந்தர்.சிகி முடிவெடுத்துவிட்டாராம். அநேகமாக ரஜினி படத்தை முடித்துவிட்டு அவர் விஷால் படத்தை இயக்குவார் என்கிறார்கள்.
ரஜினியை வைத்து சுந்தர்.சி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் முடியும் என்கிறார்கள். ஏனெனில், 2027 பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
