Categories: Cinema News latest news throwback stories

ஹீரோக்கள் பண்ற அட்டூழியம் தாங்க முடியல.. அதுனாலதான் இந்த முடிவை எடுத்தேன்!..- கடுப்பான சுந்தர் சி

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மைகளை கொண்டவர் சுந்தர் சி. இவர் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இயக்குனராக இருந்து வருகிறார்.

சில காலங்களுக்கு பிறகு இவர் இயக்கும் திரைப்படங்களை இவரே தயாரிக்க துவங்கினார். பிறகு வேறு இயக்குனர்கள் இயக்கும் குறைந்த பட்ஜெட் படங்களையும் இவர் தயாரித்தார். முக்கியமாக நடிகர் ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் பெரும் வளர்ச்சியை அடைய சுந்தர் சி பெரும் உதவிகளை செய்துள்ளார்.

Sundar C

ரஜினி, கமல் உட்பட நிறைய பெரும் நட்சத்திரங்களை கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் சுந்தர் சி. ஆனால் ஒரு பேட்டியில் பேசும்போது பெரும் நட்சத்திரங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் சுந்தர் சி.

வளர்ந்து வரும் நடிகர்களாக இருக்கும்போது நாம் சொல்வதை எல்லாம் கேட்டு நடிக்கிறார்கள். ஆனால் அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும்போது நம்மிடமே நிறைய விதிமுறைகள் போடுகிறார்கள் என கூறுகிறார் சுந்தர் சி.

கதாநாயகனாக மாறிய சுந்தர் சி:

மேலும் தலைநகரம் திரைப்படத்தின் போது இந்த பிரச்சனையை பெரிதாக சந்தித்துள்ளார் சுந்தர் சி. அந்த படத்தை சுந்தர் சியே தயாரித்தார். ஒவ்வொரு நடிகரிடமும் கதையை கூறியதும் அவர்கள் படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சுந்தர் சியையே அந்த படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறும்போது, பெரும் நடிகர்கள் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியலை. கோடி கணக்குல காசு கொடுத்தும் நடிப்பை வாங்குறது பெரும் கஷ்டமா இருக்கு. படத்தோட ப்ரோமோஷனுக்கும் வர மாட்டேங்குறாங்க. அதுக்கு நாமளே நடிச்சிட்டு போயிடலாம்னுதான் நடிகனா களம் இறங்கினேன் என சுந்தர் சி கூறியுள்ளார்.

Published by
Rajkumar