ஒரு காலத்துல கூகுள் டிரெண்டிங்கில் டாப்!.. இப்போ பர்த்டேவுக்கு கூட கண்டுக்க ஆள் இல்லை!..
ஆபாச நடிகை என ஒரு காலத்தில் கூகுளில் பல பிரபலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தவர் சன்னி லியோன். அதன் பிறகு பாலிவுட் நடிகையாக மாறிய அவர் தற்போது தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கென்னடி திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒடிடி தளத்தில் படம் வெளியான பிறகு, தனது திரைப்பயணத்தில் இந்த படம் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் தொடர்ந்து கவனம் பெற்று வரும் சன்னி லியோன், போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும் உற்சாகமாகவும் பேசிய விதம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
பிரபல நடிகை சன்னி லியோன் தனது கணவர் டனியல் வெப்பர் உடன் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு நிஷா கவுர் வெபர் என்ற மகளும், ஆஷர் சிங் வெபர் மற்றும் நோவா சிங் வெபர் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். 2017ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் லாதூரில் இருந்து நிஷாவை தத்தெடுத்த அவர்கள், பின்னர் வாடகைத் தாய் முறையின் மூலம் இரட்டை மகன்களுக்கு பெற்றோராகினர்.
சன்னி லியோன் தனது 45வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். மீடியா முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சன்னி லியோன் ரசிகர்களுக்கு கைஅசைத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
