தமிழ்நாட்டு ஸ்டைலில் மாலை மாற்றி லவ்வர்ஸ் டே கொண்டாடிய சன்னி லியோனி!
நடிகை சன்னி லியோனியின் காதலர் தின ஸ்பெஷல்!
Mon, 15 Feb 2021

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சன்னி லியோனி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று சன்னியை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர்.
இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது காதலர் தினத்தில் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வெகுவாக கவர்ந்துள்ளார். மாலை மாற்றி தமிழ் நாட்டு ஸ்டைலில் திருமணம் செய்துக்கொள்வது போன்று காதலர் தினத்தை வித்யாசமாக கொண்டாடியுள்ளார்.