×

நவரச நாயகனுடன் ஆட்டம் போட வரும் சன்னி லியோன்... ஓவர் குத்தா இருக்குமோ!

நடிகர் கார்த்திக் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சன்னி லியோன் கவர்ச்சி ஆட்டம் போட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 
 
நவரச நாயகனுடன் ஆட்டம் போட வரும் சன்னி லியோன்... ஓவர் குத்தா இருக்குமோ!

தமிழில் ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவர் டி.எம்.ஜெயமுருகன். விஜய் சேதுபதி நடித்திருந்த சிந்துபாத் படத்தையும் இவர் தயாரித்திருந்தார். இந்தநிலையில், இவர் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் தீ இவன் என்ற படத்தை இயக்குகிறார். தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் டி.எம்.ஜெயமுருகனே, இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியதோடு, இசையமைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். 


இந்தப் படத்தில் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். பொள்ளாச்சியில் முதற்கட்டமாக 45 நாட்கள் ஷூட்டிங்கை முடித்திருக்கும் படக்குழு, அடுத்தகட்டமாக சென்னை, மும்பையில் ஷூட்டிங்கைத் தொடர இருக்கிறார்கள். 

மும்பையில் நடக்கும் ஷூட்டிங்கில் ஒரு குத்துப் பாடலை படக்குழுவினர் படம்பிடிக்க இருக்கிறார்கள். அந்தப் பாடலில் நவரச நாயகன் கார்த்திக்குடன் சன்னி லியோன் நடனமாட இருக்கிறார். இதற்கு முன் ஜெய் நடித்த வடகறி படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.  
 

From around the web

Trending Videos

Tamilnadu News