விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஆர்.பி.சௌத்ரி
புது வசந்தம் படம் மூலம் தயாரிப்பளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி.சௌத்ரி. அதற்கு முன்பு திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்து வந்த அவர் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிய முதல் படம் புது வசந்தம். சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பேனர் வந்தாலே அந்த படம் நிச்சயம் வெற்றிதான் என்ற காலம் இருந்தது திரையுலகில். இவர் கிட்டத்ட்ட 90க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, எழில் என நீண்ட பட்டியலே உண்டு.
இந்த நிலையில் விஜய்க்கு முதல் ஹிட் படம் கொடுத்தவரே இவர்தான். விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த் பூவே உனக்காக படம் தான் விஜய்க்கு முதல் சில்வர் ஜூப்லி ஹிட் கொடுத்தது. இதைஅய்டுத்து துள்ளாதமனமும் துள்ளும் படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. பால சேகரன் இயக்கத்தில் விஜய் நடித்த லவ் டுடே அன்றைய இளஞர்களின் எவர்கிரின் மூவி. தொடர்ந்து ஷாஜகான், ஜில்லா, திருப்பாச்சி என ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய் நடித்த படங்கள அனைத்துமே வெற்றி பெற்றன. விஜய் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிக்க ஆ.பி.சௌத்ரியும் ஒரு காரணம்.
99 படங்கள் தயாரித்த சௌத்ரி தனது 100வது படத்தில் விஜயை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் விஜயின் வளர்ச்சி, படத்தின் பட்ஜெட் காரணத்தல் அந்த திட்டம் நிறைவேறாமலேயே இருந்தது.
இவரது தயாரிப்பில் நாட்டாமை, சேரன் பாண்டியன், சூர்யவம்சம், கண்ணூபடபோகுதய்யா, ஆனந்தம் என பல வெற்றிப்படங்கள் உண்டு.
