Categories: latest news television

கயல் சீரியலில் இருந்து விலகுகிறாரா சஞ்சீவ்?.. சரியான நேரம் பார்த்து செக் வைத்த நடிகை!..

சன் டிவியில் டிஆர்பியில் டாப் 3யில் இருக்கும் சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் ‘கயல்’. இந்த சீரியல் குடும்ப பெண்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் பிரைம் டைமில் கயல் ஒளிபரப்பாகுவதால் கூடுதல் வரவேற்பை பெற்று வருகிறது.

அப்பாவை இழந்து மொத்த குடும்ப பொறுப்புகளை சுமக்கும் செவிலியரான இந்த கதையின் நாயகி தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என அவரது பெரியப்பா போடும் திட்டம் என தன்னை சுற்றி வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் ஒரு தைரியமான பெண் தான் கயல்.

sanjeev

இந்த கயல் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி. பொறுப்பில்லாத குடிகார அண்ணன், காதலில் ஏமாந்த தங்கை என மொத்த பிரச்சினைகளையும் சுமக்கும் ஒரு தைரியசாலியான பெண் தான் கயல்.

இதையும் படிங்க :மகன் திருமணத்தால் அப்செட்டில் இருக்கும் நவரச நாயகன்!.. பின்ன அவர் செஞ்ச காரியம் அப்படி?..

இந்த சீரியலில் கயலுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜாராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சஞ்சீவ். அந்த சீரியல் மூலமாக தான் ஆல்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் தான் இப்போது இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

sanjeev

காரணம் ஆல்யா தான். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆல்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் களமிறங்குகிறார். அதுவும் சன் டிவியில் இனியா என்ற சீரியலில் லீடு ரோலில் நடிக்க இருக்கிறாராம். அதற்கான புரோமோ தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் ஆல்யாவிற்கு ஜோடியாக சஞ்சீவ் தான் நடிக்க போகிறாராம்.

alya

ஏற்கெனவே ராஜாராணியில் இவர்களின் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே இருந்தது. மீண்டும் இவர்களை திரையில் காண இருக்கும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்க போகிறது. ஆனால் இதை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini