Categories: Cinema News latest news

ரஜினி கூட ஒகே…ஆனா யோகிபாபு?!…நெல்சன் எடுத்த அதிரடி முடிவு….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்திற்கான கதை விவாத பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது, விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து நேற்றுமுதல் ஷூட்டிங் ஆரம்பமானது.

இப்பட ஷூட்டிங் நேற்று முதல் சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில், முதன் முதலாக ரஜினி மாற்று யோகி பாபு அடங்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.

முதலில் சண்டை காட்சி, அல்லது வேறு ஏதேனும் முக்கிய காட்சி படமாக்கப்படும் என பார்த்தால், யோகி பாபுவை வைத்து காமெடி காட்சிகளை எடுக்கிறார் நெல்சன் என பலர் கூறி வருகின்றனர். சிலர் சூப்பர் ஸ்டார் கால்ஷீட் கூட கிடைத்துவிடும். ஆனால், யோகி பாபு கால்ஷீட் கிடைக்காது அதனால் அவர் இப்பொது ப்ரீயாக இருக்கும் போதே காட்சிகளை முடித்து அனுப்பிவிடலாம் என நெல்சன் நினைத்துவிட்டார் என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – விக்னேஷ் சிவனை மிரட்டிய தனுஷ்.? இனிமேல் சல்லி பைசா கிடையாது.! நயன்தாரா தான் ரெம்ப பாவம்…

ஏற்கனவே, ரஜினியுடன் பேட்ட படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போதும் யோகி பாபு பிசியாக இருந்ததால், தர்பார் படத்தில் யோகி பாபு இருந்தே ஆகணும் என கூறி ரஜினி கூறியதன் பெயரில் தான் யோகி பாபு நடித்தார் என சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதே போல தான் தற்போதும் யோகி பாபு ஜெயிலரில் இணைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan