Categories: Cinema News latest news

பாலியல் சர்ச்சை நடிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி.! அதிர்ச்சியூட்டும் பின்னணி…

தலைவர் ரஜினிகாந்த் மீண்டும் பழைய உற்சாகத்துடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்து விட்டார். நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதுவும் முதற்கட்டமாக ஆக்சன் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றனவாம். ஸ்டன் சிவா தான் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருகிறாராம். இதில் மலையாள வில்லன் நடிகர் விநாயகம் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

 

திமிரு , மரியான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த நடிகராக இருக்கிறார். அதனை விட, சில மாதங்களுக்கு முன்னர் சில பெண்கள் அளித்த புகாரின் பேரில் பாலியல் புகாரில் சிக்கி கைது, ஜாமீன் என சிக்கி கொண்டவர்.

இதையும் படியுங்களேன் – எல்லாம் தளபதி 67 செய்த வேலை… திரிஷாவை கண்டு நடுங்கும் தமிழ் தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சி தகவல் இதோ..

மேலும், நான் இதுவரை பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன். ஓகேவா என கேட்பேன். அவர்களும் ஓகே என கூறினால், சம்மதத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்வேன். என ஓபனாக கூறி தென்னிந்திய சினிமாவில் புயலை கிளப்பிய நடிகர் விநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி பாலியல் சர்ச்சையில் சிக்கியதால், தமிழ் படங்களில் யாரும் அழைக்காமல் இருந்தனர். ஆனால், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரத்தின் படத்தில் பாலியல் சர்ச்சை நடிகர் நடிப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Manikandan
Published by
Manikandan