Categories: Cinema News latest news

நாங்களும் இந்திய குடிமகன் தான்… விஜய், ரஜினி செய்த சிறப்பான சம்பவம் இதோ…

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி வருடம்தோறும் வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி அது சுதந்திர தின விழாவாக கொண்டாட படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், இந்த வருடம்  “இல்லம் தோறும் தேசிய கொடி” என்ற திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

“இல்லம் தோறும் தேசிய கொடி” திட்டம் என்னவென்றால், இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- நல்லது செஞ்சது குத்தமா.?! தவிக்கும் தமிழ் சினிமா.! ஐடி ரெய்டின் பகீர் பின்னணி…

இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு தேசிய கொடியை ஏற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அனைவரையும் தேசிய கொடி ஏற்றும் படி தெரிவித்தும் இருந்தார். அதற்கான வீடியோவும் கூட இணையத்தில் வைரலானது.

அவரை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், அவரது ரசிகர் மன்ற அலுவலகமான விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திலும், தேசிய கொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி சொன்னபடி தேசிய கொடி ஏற்றுவதற்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி விஜய்யும் அதனை நிறைவேற்றி ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர்.

Manikandan
Published by
Manikandan