Categories: Cinema News latest news

விஜய்யை வச்சு செய்யும் முடிவில் லோகேஷ் கனகராஜ்!.. தலைவர் 171 படத்தோட டைட்டில் இதுதானா?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் எல்லாம் கோபி பிரசன்னா இப்படி ஒரு அறிமுக டிசைனை லியோ படத்துக்கு கொடுக்கவில்லையே என அவரை ரவுண்டு கட்டி சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் அளவுக்கு அந்த அறிமுக டிசைன் போஸ்டர் அல்டிமேட் ஆக இருந்தது.

நடிகர் ரஜினிகாந்தை இதுவரை ரசிகர்கள் பார்க்காத அளவில் தெறி மாஸாக மீசை எல்லாம் ட்ரிம் செய்து கையில் தங்கச் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல வாட்ச்களால் அவர் கை கட்டப்பட்டு இருப்பது வித்தியாசமாகவும் புதுசாகவும் இருக்கே என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: யம்மாடி!.. காமப் பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி காட்டும் சமந்தா!.. இதுக்கு மேல தாங்காதும்மா!..

இதுவரை எந்தவொரு ஹாலிவுட் பட போஸ்டரிலும் இந்த டிசைன் வரலையா என விஜய் ரசிகர்கள் காப்பி என கலாய்க்க வெறித்தனமாக தேடி வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 22ம் தேதி தலைவர் 171வது படத்தின் டைட்டில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். மேலும், இதுவரை எந்தவொரு படத்திலும் பார்க்காத தலைவரை இந்த படத்தில் பார்ப்பீங்க என வாக்குறுதி கொடுத்துள்ளார். புதுசா பார்க்கத்தான் புதிய படம் எடுக்குறாங்க, இதெல்லாம் ஒரு பேச்சா என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: கட்டு கட்டாக பணம் கொடுத்த ஜெயலலிதா!.. வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்லும் ரகசியம்…

ஏப்ரல் 22ம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் தலைப்பு ‘கழுகு’ என்று தகவல்கள் கசிந்துள்ளன. கழுகு அல்லது ஆங்கிலத்தில் ‘ஈகிள்’ என்பதை வைக்கத்தான் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே காக்கா – கழுகு பிரச்சனை பெரிதாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதை வைத்து பிசினஸ் பண்ண பார்க்கிறாரா லோகேஷ் கனகராஜ் என்றும் ‘கழுகு’ டைட்டிலில் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்துள்ளாரே என்றும் சினிமா வட்டாரத்தில் விவாதங்கள் கிளம்பி உள்ளன.

Saranya M
Published by
Saranya M