Categories: Cinema News latest news

மன உளைச்சலால் ரஜினி எடுத்த அதிரடி முடிவு… சோகத்தில் ரசிகர்கள்…!

வாழ்க்கையில் யாரும் அவ்வளவு எளிதாக மிக உயரத்திற்கு சென்றுவிட முடியாது. அதுபோல் மிகவும் கஷ்டப்பட்டு படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னேறியவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தனது திறமை மற்றும் விடா முயற்சி காரணமாக தற்போது கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில் சமீபகாலமாகவே ரஜினியின் வாழ்க்கையில் சோகப்புயல் வீச தொடங்கியுள்ளது. ரஜினிக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருந்தது. ஆனால் அவரின் அரசியல் கனவு வெறும் கனவாகவே போய்விட்டது.

அதேபோல் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே தொடர் தோல்வியை தழுவியது. இதுதவிர தற்போது அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா அவரது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய உள்ளார். ஆனால் இதில் ரஜினிக்கு துளியும் விருப்பம் இல்லையாம். இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ரஜினி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.

இதற்கிடையில் அவரின் அடுத்த படம் யாருடன் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “இப்போதைக்கு நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. தற்போது நான் தனிமையில் இருக்க விரும்புகிறேன்.

அதோடு சில காலம் கழித்து நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம். கொஞ்சம் என்னை தனிமையில் விடுங்கள்” என ரஜினி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ரஜினியின் இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini