ullasam ajith, maheshwari
உல்லாசம் படத்தில் நடித்ததுக்குப் பிறகு மகேஷ்வரியைப் பற்றி கவனிக்க முடியவில்லை. அழகான முகத்தோற்றம். முகபாவனை, டான்ஸ் என அனைத்திலும் அபாரம். அந்தப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்கிறார்.
maheshwari
மிகவும் ஜாலியான படம். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படம் ரிலீஸாகும்போது சில பேருக்கு பிடிச்சிருந்தது. சிலபேருக்கு பிடிக்கல. ஆனால் படம் நல்லா தான் இருந்தது. கமர்ஷியலா பெரிய ஹிட் இல்லேன்னாலும் எல்லாருக்கும் நல்ல பேரு கிடைச்சது. என்ஜாய் பண்ணி நடிச்ச படம்.
கருத்தம்மா அனுபவம் பற்றி கூறுகையில், பாரதிராஜா சார் எனக்கு குரு. சார் பார்த்ததும் படத்தில் நடிக்கலாமான்னு கேட்டார். நான் நெனைச்சேன். நாலு நாள்ல என்ன வேண்டாம்னு சொல்லிடுவாங்கன்னு நெனைச்சேன்.
அந்தப்படத்தில் பாரதிராஜா சார் பத்தி சொல்லணும்னா அவர் ஒரு யுனிவர்சிட்டி. அவர் வந்து எல்லாமே சொல்லித் தந்தாரு. எப்படி பழகணும், எப்படி இருக்கணும், எப்படி நடக்கணும், எப்படி நிக்கணும், எப்படி நளினமா இருக்கணும், எப்படி நடிக்கணும்னு நடிச்சிக்காட்டுவாரு. அவரு நடிச்சிக்காட்டுனதுல நாம ஒரு 50 பர்சண்ட் நடிச்சா போதும். அது ஒரு நல்ல அனுபவம்.
முதல்ல ஒண்ணும் புரியல. வீட்டுக்குப் போய்ட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். செகண்ட் செடியுல்ல வந்து நார்மலானேன். படம் வர்ற வரைக்கும் இது என்னன்னு ஒண்ணுமே புரியல.
தென்மேற்கு பருவக்காற்று, பச்சக்கிளி பாடும் பாட்டுன்னு சாங்ஸ் எல்லாமே சூப்பரா இருந்துச்சு.
maheshwari
பிரபுதேவாகூட டான்ஸ் ஆடின அனுபவம் பத்தி பேசும் போது அது கஷ்டமாச்சே…நான் எப்படி பண்றது?ன்னு நினைச்சு பயந்தேன். ஈக்குவலா ஆட முடியாதுன்னாலும், பக்கத்துல நின்னு ஆடுனா நாலு பேரு சிரிக்காமலாவது இருக்கணுமேன்னு பார்த்தேன். பயம், எக்சைட்மெண்ட், ஹேப்பினஸ்னு எல்லாமே இருந்தது.
ஆனா சரியா டான்ஸ் ஸ்டெப் வரலேன்னாலும் பரவாயில்ல. கூட ஒரு வாட்டி பண்ணுங்கன்னு பொறுமையா சொல்லிக் கொடுத்ததால அவரு பண்ண அட்ஜஸ்ட்மண்டால என்னால ஆட முடிஞ்சது. அவர் ஒரு மனிதாபிமானமான நபர். அவரது மனம் மிகப்பெரியது.
maheshwari
நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில பிரபுதேவா சார் கூட ந டிச்ச போது கட்டான பொண்ணு ரொமான்டிக்கா பாடல் செம சூப்பர். செம டான்ஸ். படங்களில் பண்ணதும் சீரியலுக்கும் நடிச்ச அனுபவம் ஒண்ணும் தெரியல. சீரியல் தானன்னு நான் டேக் இட் ஈஸியா பண்ணல. எது இருந்தாலும் நல்லா பண்ணணும்னு தான் பண்ணுணேன்.
திரும்பவும் படங்களுக்கு நடிக்க வருவீங்களான்னு கேட்டால் சிரிப்பாய் சிரிக்கிறார். இப்ப உள்ள சூழல்ல நாம தியேட்டருக்கு வந்து படம் பார்த்தாலே பெரிய அனுபவம் தான் என்கிறார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…