Categories: Cinema News latest news throwback stories

33 ஆண்டுகளைக் கடந்தும் பேசப்படும் படம்…! கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு இது 100வது படம்!!

சில படங்களை நாம் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். சலிப்பே தட்டாது. அந்த மாதிரியான படங்களில் ஒன்று தான் கங்கை அமரனின் கரகாட்டக்காரன். இந்தப்படம் 1989ல் வெளியானது. இப்போது 33 ஆண்டுகளாகி விட்டன.

கவுண்டமணி செந்தில் ஜோடியின் 100வது படம் தான் கரகாட்டக்காரன். அந்தக்கால கட்டங்களில் இந்தப் படத்தோட ஆடியோ கேசட் விற்பனையைப் பார்த்து விட்டு கடைக்காரர்களே அப்படியே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர். அந்தக்காலத்தில் மாங்குயிலே, பூங்குயிலே என்ற பாடல் இடம்பெறாத திருவிழாக்களே இல்லை எனலாம்.

Valaipala comedy

முக்கியமாக ஊர் திருவிழாக்களில் இடம்பெரும் கரகாட்ட நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடலைக் கட்டாயமாக வாசித்து விடுவார்கள். வாழைப்பழ காமெடி, சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக…ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக என்ற காமெடிகள் இப்போது ட்ரெண்டிங்கில் தான் உள்ளது.

இந்தப்படத்தில் ராமராஜன் – கனகாவின் ஜோடிக்கான கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட்டாகி உள்ளது. கதைக்குத் தேவையான ஆக்ஷன், காமெடி, சென்டிமண்ட், பாடல்கள் என அனைத்தும் பக்காவாக இடம்பெற்றுள்ளது படத்தின் வெற்றிக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். மசாலாவை சரியான அளவில் தடவிய தமிழ்ப்படம் என்றால் அது கரகாட்டக்காரன் தான்.

இந்தப்படத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இசை தான். இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான இந்தப்படத்தின் பாடல்கள் எவர்கிரீன் ஹிட் அடித்துள்ளன. 33 வருஷங்களைக் கடந்த போதும் இந்தப் படத்தைப் பற்றி அலாதியாக நம்மை பேச வைக்கின்றன என்றால் அதற்கு காரணம் இவரது இசை தான்.

Karakattakkaran 2

பாட்ஷா, சூரிய வம்சம், நாட்டாமை, அருணாச்சலம், படையப்பா என ஒரு சில படங்களில் தான் எல்லா காட்சிகளும் நம் மனதில் ஒட்டும். டயலாக்குகளும் நமக்கு மனப்பாடமாக இருக்கும். அதே மாதிரி தான் இந்தப்படமும் அமைந்து விட்டது.

படம் வெளியான புதிதில் கடைத்தெரு, வீதி, கோவில் என எங்கு பார்த்தாலும் கரகாட்டக்காரன் பற்றிய பேச்சாகத் தான் இருக்கும். ஒரு வருடம் மூச்சு விடாமல் ஓடிய படம் கரகாட்டக்காரன்.

Karakattakaran

கரகாட்டக்கலைக்குப் பேர் போன கனகாவை ஊர் கோவிலுக்குப் புதிதாக வரும் தர்மகர்த்தா சந்தானபாரதி தொட முயல்கிறார். அப்போது கனகா அவரது கன்னத்தில் பளார் என அறைந்து விடுகிறார். அதனால் அவரை பழி தீர்க்கும் வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் கனகா ஆடக்கூடாது என்கிறார்.

அதனால் சேந்தம்பட்டி முத்தையாவாக ராமராஜன் கரகாட்டம் ஆட வருகிறார். இரு கரகாட்டக்குழுவினருக்கும் ஆரம்பத்தில் மோதல் வர அதுவே ராமராஜன் கனகாவின் காதலாகவும் மலர்கிறது.

இடையில் ஏற்படும் குடும்பப்பிரச்சனையைத் தாண்டி காதல் கைகூடியதா என்பதே படத்தின் கதை. படத்தையும் தயாரித்து பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரனே எழுதியுள்ளார்.

Published by
sankaran v