×

90ல் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ...
 

சினிமா ரசிகன் பார்வை
 
mmkr
''அதே ரசனை சிறிதும் குறையாமல் தமிழ்சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல பெரிதும் உதவியவர்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் தான் என்றாலும், வெகுஜன மக்கள் அதன் வழியாக ஒரு நல்ல கருத்து வந்தால் அதைத்தான் பெரிதும் வரவேற்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.''

90களில் தமிழ்சினிமா ரசிகர்கள் மிகுந்த ரசனைமிக்கவர்களாக இருந்தனர். இவர்கள் 80களில் வெளியான தமிழ்சினிமாக்களையும் ரசித்த அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால், அதே ரசனை சிறிதும் குறையாமல் தமிழ்சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல பெரிதும் உதவியவர்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள்.

சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் தான் என்றாலும், வெகுஜன மக்கள் அதன் வழியாக ஒரு நல்ல கருத்து வந்தால் அதைத்தான் பெரிதும் வரவேற்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்படித்தான் நம் கதாநாயகர்கள் எம்ஜிஆர் முதல் ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் வரை வளர்ந்து வந்து இருக்கிறார்கள். முன்பு சினிமாவின் கதையோட்டத்தில் தான் பஞ்ச் டயலாக் வரும். இப்போது பஞ்ச் டயலாக்குகளுக்காகத் தான் படம் என்று மாறியுள்ளது. இதுதான் அக்கால சினிமாக்களுக்கும், இக்கால சினிமாக்களுக்கும் உள்ள சின்ன வித்தியாசம். ரசிகர்களின் ரசனையும் காலத்திற்கேற்ப மாறி வருவது இயல்புதானே. மாற்றம் ஒன்றே மாறாதது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். 

அந்த மாற்றத்தையே பெரிதும் ரசனையுடன் செய்து வரும் திரைப்பட நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, அஜீத் போன்ற நடிகர்கள் உள்ளனர். இவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா ரசிகர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு படங்களில் தங்களால் முடிந்த அளவு வித்தியாசம் காட்டுவர். மேக்கப் ஆனாலும் சரி. படக்கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள் என ஏதாவது ஒரு அம்சத்தைப் படத்திற்கு படம் வித்தியாசப்படுத்த முயல்வார்கள்.  சிறந்த கலா ரசனை என்பது படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முற்படுவதுதான். அப்படி வளர்ந்து வந்தது தான் தமிழ்சினிமா. தற்போது உலகத்தரத்துக்கு வளர்ந்துள்ளது என்றால் மிகையில்லை. 

90களில் வெளியான சூப்பர்ஹிட் படங்களில் ஒருசிலவற்றைப் பார்க்கலாம்...வாங்க...

அதிசயப்பிறவி, இணைந்த கைகள், கேளடி கண்மணி, புதுவசந்தம், புலன்விசாரணை, பாட்டுக்கு நான் அடிமை, மைக்கேல் மதன காமராஜன், மௌனம் சம்மதம், வேடிக்கை என் வாடிக்கை, வைகாசி பொறந்தாச்சு.

அதிசயப்பிறவி


1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி, கிங்காங் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற அன்னக்கிளியே, இதழ் சிந்தும், பாட்டுக்கு பாட்டு, சிங்காரி...பியாரி பியாரி, உன்ன பாத்த நேரம், தான தனம் போன்ற பாடல்கள்  சூப்பர். ரஜினிகாந்த் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். 

இணைந்த கைகள் 

1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படம். இப்படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி நடித்துள்ளனர் இப்படத்தை இயக்கியவர் -என். கே. விசுவநாதன் . தயாரிப்பு மற்றும் திரைக்கதை ஆசிரியர் -ஆபாவாணன். இசை-ஞான வர்மா ஒளிப்பதிவு- என் கே விஸ்வநாதன் படத்தொகுப்பு-அசோக் மேத்தா. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டது.

இப்படத்தில் 8 பாடல்கள் உள்ளது.; பாடல் அனைத்தும் ஆபாவாணன் எழுதியுள்ளார். பின்னணி பாடியவர் மலேசியா வாசுதேவன், வித்யா, தீபன் சக்கவர்த்தி, கங்கை அமரன் மற்றும் பலர். படத்தில் மலைஏற்றத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார்கள். 

கேளடி கண்மணி 

கேளடி கண்மணி என்பது 1990ல் வசந்த் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபல இந்திய பின்னணிப் பாடகரான எஸ். பி. பாலசுப்ரமணியம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ராதிகா, ரமேஷ் அரவிந்த், கீதா, விவேக் ஆகியோர்  நடித்திருந்தனர். வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான இது. 200 நாட்களைக் கடந்து ஓடியது.

கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வசந்த் இந்த திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் ராதிகா அழும் காட்சியே, தான் இயக்கிய முதலாவது காட்சி என்று வசந்த் கூறுகிறார்.

இந்தப்படத்தில் நடித்த் ராதிகாவுக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த பாடலாசிரியர-வாலி;, சிறந்த பின்னணிப்பாடகர்-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என 3 விருதுகளைப் பெற்ற படம் இது. 
என்ன பாடுவது.., கற்பூர பொம்மை ஒன்று, மண்ணில் இந்த காதலின்றி, நீ பாதி நான் பாதி, தண்ணியிலே நனைஞ்சா பாடல்கள் ரசனைக்கு உரியவை. 

பாட்டுக்கு நான் அடிமை

1990 ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். படத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பூ, ரவிச்சந்திரன், கவுண்டமணி, செந்தில், மனோரமா, சுலோச்சனா, ரூபா, கிரிஸ், அருண், ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், பாண்டு, டிஸ்கோ சாந்தி உள்பட பலர் நடித்துள்ளனர். சண்முகப்பிரியன் கதை எழுதி இயக்க, இளையராஜா இசையமைக்க, ரமேஷசந்த்; ஜெயின் தயாரிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

தாலாட்டு கேட்காதா, பூவே பூவே, புள்ளி வச்சா, யார் பாடும், பாட்டுக்கு ஜோடியா பாடல்கள் சூப்பர் ரகங்கள்.

புது வசந்தம் 
1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். விக்ரமன் இயக்கிய படம். மேலும் ஆர். பி. சௌத்ரி மற்றும் ஆர். மோகன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி, சித்தாரா, சுரேஷ், வினுசக்ரவர்த்தி, ஓமக்குச்சி நரசிம்மன், விஜயகுமார், மஞ்சுளா, கே.எஸ்.ரவிக்குமார் (சிறப்புத் தோற்றம்) உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசையில் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. பாடல்களுக்காக ஓடிய படம் என்றால் மிகையில்லை. 

ஆயிரம் திருநாள், கௌரிக்கு திருமணம், இது முதல் முதலா, பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா, போடு தாளம் போடு, வாருங்கள் வாருங்கள், ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடல்கள் நம்மை தாளம் போட வைக்கும் ரகங்கள்.

புலன் விசாரனை

புலன் விசாரனை 1990 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இப்படத்தினை ஆர். கே. செல்வமணி இயக்கினார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ரூபினி, ஆனந்த்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் நிறைந்த படம் இது. அப்போதைய ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. படத்தின் சண்டைக்காட்சிகள் படு சூப்பர். விஜயகாந்துக்கு பெரும் வெற்றிப்படமாக இது அமைந்தது.

மைக்கேல் மதன காமராஜன் 

மைக்கேல் மதன காமராஜன் 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். 

படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 4 வேடங்களில் நடித்து வெளுத்து வாங்கியிருப்பார். நகைச்சுவைக்காட்சிகள் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் பெரிய வெற்றியாகக் கொண்டாடினர். படத்தில் கிரேசி மோகன் வசனம் எழுதி உள்ளார். கதையை காதர் காஷ்மீரியும், திரைக்கதையை கமல்ஹாசனும் எழுதியுள்ள்ளனர். 

இளையராஜாவின் இன்னிசையில் கதைகேளு, கதைகேளு..., ரம்பம்பம்...ஆரம்பம்..., சிவராத்திரி தூக்கமேது....ஹோய்.., சுந்தரி நீயும், சுந்தரன் ஞானும்..., வச்சாலும் வைக்காம போனாலும், மத்தாப்பூ ஒரு பெண்ணா, ஆடிப்பட்டம் தேடி பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகங்கள். இதில் கடைசி இரு பாடல்கள் படத்தின் நீளம் கருதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌனம் சம்மதம் 


மௌனம் சம்மதம் இயக்குனர் கே. மது இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மம்முட்டி, அமலா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இப்படத்தில் மம்முட்டி, அமலா, ஜெய்சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன், சரத்குமார், நாகேஷ், தியாகு, சார்லி, வி.எம்.சி.ஹனீபா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை இளையராஜா. பாடல்கள் அனைத்தும் மெலடி ரகங்கள். 

கல்யாண தேன் நிலா, ஒரு ராஜா வந்தான், சிக் சிக் சா, தித்திதாம்...பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனவை.      
மம்முட்டியின் தமிழ் வசனத்தில் மலையாள வாடை வீசினாலும் தெளிவாக நிறுத்தி அழகாக பேசுவது அவரது தனி ஸ்டைல். அவரது குரலில் உள்ள கம்பீரம் அவர் நடிக்கும் படங்களைப் பார்க்கத் தூண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

வேடிக்கை என் வாடிக்கை 
இப்படம் 90ல் வெளியானது. விசு படம் என்றாலே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிறந்த குடும்பப்பாங்கான திரைப்படம் எடுப்பதில் வல்லவர். இவர் படம் பார்க்க தாய்க்குலங்கள் திரையரங்கில் வந்து குவிந்து விடும். அப்படித்தான் அவரது பல படங்கள் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் இது. யதார்த்தமான திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இவர் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தார்.
எஸ்.வி.சேகர், பல்லவி, டெல்லி கணேஷ், மனோரமா, பூர்ணம் விஸ்வநாதன், விசு, வடிவுக்கரசி, கிஷ்மு, திலீப், கோபி, குட்டி பத்மினி, ரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார். ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் தயாரிப்பில் வெளியான இப்படத்தை விசு இயக்கியுள்ளார். 

வைகாசி பொறந்தாச்சு 

1990ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். ராதா பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பிரசாந் மற்றும் புதுமுக நடிகை காவேரி ஆகியோர் நடித்திருந்தனர். கே. பிரபாகரன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் புதுமுக நடிகரும் தியாகராஜனின் மகனுமான பிரசாந்திற்கு பெரும் திருப்பத்தை தந்தது. வர்த்தக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தது.

இத்திரைப்படம் இந்தி மொழியில் "ஐ லவ் யூ" எனும் பெயரில் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திலும் நாயகனாக பிரசாந்த் நடித்திருக்க நாயகியாக சபா நடித்திருந்தார்.

தேவா இசையில் உருவான அனைத்து பாடல்களும் பட்டையைக் கிளப்பின. இப்படத்திற்கு 90ம் ஆண்டு சிறந்த இசையமைப்பிற்காக தேவாவிற்கு தமிழக அரசின் விருது, சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பிரசாந்திற்கும் கிடைத்தது. அதே ஆண்டில் சிறந்த அறிமுக நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் பிரசாந்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைப் பார்க்க மாணவர்கள் கூட்டம் கல்லூரியிலிருந்து கட் அடித்து விட்டு வருவார்கள்.   

பப்பளக்கிற பளபளக்கிற பப்பாளி பழமே...ஆத்தா உன் கோவிலிலே, சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது, இஞ்சி இடுப்பழகி, கண்ணே கரிசல்மண்ணு, நீலக்குயிலே, தண்ணிக்குடம் எடுத்து, வாழ மரம் போன்ற பாடல்கள் மனதை விட்டு நீங்காதவை. இளைஞர்கள் மத்தியில் சக்கை போடு போட்டவை.                                                                                                               
 

From around the web

Trending Videos

Tamilnadu News