×

18 வருடப் பழக்கத்தை மாற்றிக்கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர்… எல்லாம் இந்த கொரோனாவால்தான்!

நடிகர் அக்‌ஷ்ய்குமார்  8 மணி நேரத்துக்கு மேல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற தன் முடிவை இப்போது மாற்றிக்கொண்டுள்ளார்.

 

நடிகர் அக்‌ஷ்ய்குமார்  8 மணி நேரத்துக்கு மேல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்ற தன் முடிவை இப்போது மாற்றிக்கொண்டுள்ளார்.

நடிகர் அக்‌ஷ்ய் குமார் உருவாகி வரும் பெல்பாட்டம் படத்தின் படப்பிடிப்புக்காக நெதர்லாந்துக்கு படக்குழுவினரோடு சென்றுள்ளார் அக்‌ஷய்குமார். கொரோனா காரணமாக அந்நாட்டு அரசு, வெளிநாட்டுப் பயனிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த, அக்‌ஷய் குமார் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

படப்பிடிப்பை தாமதமில்லாமல் முடிக்க அக்‌ஷய் குமார் ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன் படி கடந்த 18 ஆண்டுகளாக படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் மட்டுமே கலந்துகொள்வேன் என்ற முடிவில் இருந்த அவர் இப்போது 14 மணிநேரம் வரை நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளாராம். மேலும் படக்குழுவை இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News