Connect with us
Rajni Vs Vijay

Cinema News

கடைசி 10 படங்கள்.. வசூல் சக்கரவர்த்தி யார்?!.. சூப்பர்ஸ்டாரா?.. தளபதியா?!. வாங்க பார்ப்போம்!..

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு தமிழ்த்திரை உலகில் போட்டா போட்டி நடப்பதாகப் பேசப்பட்டது. அதில் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என்றார்கள். இதற்கு ரஜினி காக்கா, கழுகு கதை சொல்ல, விஜய் அடுத்ததாக ரஜினி எனக்கு அப்பா மாதிரின்னு சொல்லி அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே வேளையில் இருவரது படங்களும் வசூலில் போட்டி போட்டுக்கொண்டு வருகிறது. அந்த வகையில் யார் உண்மையான வசூல் சக்கரவர்த்தி?ரஜினிக்கு கடைசியாக வெளியான 10 படங்களையும், விஜய்க்கு கடைசியாக வெளியான 10 படங்களையும் வைத்துப் பார்த்தாலே தெரிந்து விடும். வாங்க பார்க்கலாம்.

இதையும் படிங்க… ஸ்டிரிக்டான ஆஃபிஸரா? ‘எந்திரன்’ படப்பிடிப்பு சமயத்தில் ரஜினியிடம் மாட்டிக் கொண்ட சந்தானம்

ரஜினிக்கு கடைசியாக வெளியான படம் ஜெயிலர். விஜய்க்கு வாரிசு. ஜெயிலர் படம் வெளியாகி 12வது நாளிலேயே 550கோடி வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு வசூல் 600 கோடியைத் தொட்டது. துணிவு படம் வெளியான சமயம் வாரிசு படம் 310 கோடி வசூலித்தது.
இதுல ஜெயிலர் தான் வின்னர்.

ரஜினிக்கு ஜெய்லருக்கு முன்னாடி அண்ணாத்த படம் ரிலீஸ். விஜய்க்கு பீஸ்ட் ரிலீஸ். 2021ல் வெளியான அண்ணாத்த 240 கோடியை வசூலித்தது. 2022ல் விஜயின் பீஸ்ட் 250 கோடியை வசூலித்தது. அதே சமயம் கேஜிஎப் 2 வெளியானது குறிப்பிடத்தக்கது. இதுல பீஸ்ட் தான் வின்னர்.

அதுக்கு முன்னாடி ரஜினிக்கு தர்பார் ரிலீஸ். விஜய்க்கு மாஸ்டர் ரிலீஸ். 2020ல் தர்பார் 250 கோடியை வசூலித்தது. பட்ஜெட் 200 கோடிக்கும் அதிகம். அதனால பாக்ஸ் ஆபீஸில் பிளாப் ஆனது. 2021ல் மாஸ்டர் ரிலீஸ். 135 கோடியில் எடுக்கப்பட்ட படம் 300 கோடியை வசூலித்தது. படத்தோட பட்ஜெட்டை விட 150 கோடிக்கும் அதிகமாக வசூலானது. இதுல மாஸ்டர் தான் வின்னர்.

அதுக்கு முன்னாடி 2019ல் ரஜினிக்கு பேட்ட ரிலீஸ். இது 240 கோடியை வசூலித்தது. அதே சமயம் விஸ்வாசம் படமும் வெளியானது. 2019ல் விஜய்க்கு பிகில் வெளியானது. 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 320 கோடியை வசூலித்தது. இதுல பிகில் தான் வின்னர்.

இதையும் படிங்க… அந்த விஷயத்தில் விஷாலையே வியக்க வைத்த கமல்… என்ன செய்தார்னு தெரியுமா?

2018ல் விஜயின் சர்கார் ரிலீஸ். 110 கோடி பட்ஜெட், ஆனால் 260 கோடி வசூல். ரஜினியின் 2.0 படம் 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 800 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. இந்தப் படத்தோட பட்ஜெட் அதிகம். ஆனால் சர்கார் படம் பட்ஜெட்டை விட ஒரு மடங்குக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

2018ல் ரஜினிக்கு காலா படம் வெளியானது. 140 கோடி பட்ஜெட். ஆனால் 160 கோடி தான் வசூல். 2017ல் விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் 120 கோடி பட்ஜெட், வசூல் 260 கோடி. இதுல மெர்சல் தான் வின்னர்.

Kabali

Kabali

2016ல் ரஜினிக்கு கபாலி ரிலீஸ். 100 கோடி பட்ஜெட், வசூல் 650 கோடி. 2017ல் விஜயின் பைரவா ரிலீஸ். 115 கோடியை வசூலித்தது. இதன் பட்ஜெட் 50 கோடி. 2014ல் 110 கோடி பட்ஜெட்டில் லிங்கா எடுக்கப்பட்டு 157 கோடி வசூல். 2016ல் விஜயின் தெறி 150 கோடியை வசூலித்தது. இதன் பட்ஜெட் 75 கோடி தான். இதுல விஜய் தான் வின்னர்.

ரஜினிக்கு 2014ல் கோச்சடையான் ரிலீஸ். 125 கோடி பட்ஜெட், ஆனா 42 கோடி தான் வசூல். பிளாப். 2015ல் விஜய்க்கு 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது புலி. இதன் வசூலும் 100 கோடிதான். அதனால பிளாப். ரஜினிக்கு 2010ல் எந்திரன் ரிலீஸ். 150 கோடி பட்ஜெட். 300 கோடி வசூல். 2014ல் விஜய்க்கு 70 கோடி பட்ஜெட்டில் கத்தி எடுக்கப்பட்டு 128 கோடி வசூல். இதுல ரஜினி தான் வின்னர்.

மேற்கண்ட தகவலின் படி ரஜினி கடைசியாக நடித்த 10 படங்களின் வசூல் 3300 கோடி. தளபதி விஜயின் கடைசி 10 படங்களின் வசூல் 2200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top