×

சூப்பர் ஸ்டாருக்கு தங்கையான சாய் பல்லவி… சோகத்தில் ரசிகர்கள்!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் பதிப்பில் சிரஞ்சீவிக்கு தங்கையாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.

 

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் பதிப்பில் சிரஞ்சீவிக்கு தங்கையாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.

தமிழ் ஹிட் படங்களின் கதைகளுக்கு இப்போது தெலுங்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது. கத்தி, நேர்கொண்ட பார்வை மற்றும் வேதாளம் ஆகிய படங்களை இப்போது ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்துக்காக தனது திரையுலக வாழ்க்கையில் முதல் முறையாக மொட்டை அடித்துள்ளார் சிரஞ்சீவி. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்ப் பதிப்பில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதித்துள்ளாராம். பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவிதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனால் ரசிகர்களோ சாய் பல்லவியை சிரஞ்சீவிக்கு நாயகியாக போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் தங்கையாக நடிக்க வைத்துவிட்டார்களே என்று உச் கொட்டுகிறார்களாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News