தவெகவுக்கு சப்போர்ட் செய்ததால் என் வாழ்க்கையே போச்சு… புலம்பும் சன் டிவி நடிகர்
தமிழக வெற்றிக் கழகத்தின் விஜயிற்கு தன்னுடைய ஆதரவை கொடுத்து வந்த காரணத்தால் தனக்கு சீரியல் வாய்ப்பு எல்லாமே போய் பிழைப்பிற்கே கஷ்டப்படுவதாக பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் அரசியல் வரலாறே பெரிய ஆச்சரியங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. சினிமாவின் உச்ச நடிகராக இருந்த விஜய் அதை விடுத்து புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன கட்சி என பலரும் பேசி வந்தனர்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் விஜயின் முதல் தேர்தலிலேயே 108 தொகுதியை தவெக தட்டி தூக்கியது. ஒரு தொகுதி ஜெயிப்பாரா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் போட்டியிட்ட ரெண்டு தொகுதிகளிலுமே தவெக தலைவர் விஜய் பெரிய வெற்றியை பெற்றார்.
இந்நிலையில் விஜயிற்காக பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவாக பேசி வந்தனர். அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டும் அவர்கள் பேசி வந்தனர். இதனால் இவர்களுக்கு லைஃப் செட்டில் என பலரும் கலாய்த்து வந்தனர்.
ஆனால் இதற்கு மாறாக பிரபல சின்னத்திரை நடிகர் அருண் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அவர் பேசும் போது, எனக்கு நிறைய ஃபாலோயர் இருப்பதால் ஜாலியாக இருப்பேன் என நம்புகின்றனர். ஆனால் எனக்கு தவெகவுக்கு ஆதரவாக பேசியதாலே வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.
எனக்கு வர வேண்டிய பணமும் வராமல் தடைப்பட்டு இருந்தது. பாலோயர் எல்லாமே விஷயமே இல்லை. இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக ஆதரவை தந்து வருகிறேன் என அதிர்ச்சியான தகவலை குறிப்பிட்டு இருக்கிறார்.
