×

10 வயது குறைவான நபரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை?

தனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ள ஒரு யோசனையும் இல்லை என்றும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
Surekha

ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த சுரேகா வாணி பாலிவுட் படமான சண்டாள் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் அறிமுகமானார். தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படங்களில் நடித்தார் சீனியர் நடிகை சுரேகா வாணி.

அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் இவரது கணவர் அண்மையில் தான் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

Surekha

இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவ்வப்போது தனது மகளுடன் நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது போன்று ஜாலியாக இருக்கிறார்.

அப்ப எல்லாமே பொய்யா!.. போயஸ்கார்டனில் ரூ.150 கோடி வீடு.. மகளுக்கு கட்டித்தரும் ரஜினி.....

இந்த நேரத்தில் தான் சுரேகா வாணி தன்னை விட 10 வயது குறைந்தவரை இரண்டாவது திருமணம் செய்கிறார் என செய்திகள் வர ஆரம்பித்தன.

Surekha

இதுகுறித்து நடிகை பேசுகையில், தனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ள ஒரு யோசனையும் இல்லை என்றும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கடும் கோபமாக தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News