×

கல்யாண வயசுல பொண்ணு... இரண்டாவது திருமண ஆசையா... கொதிக்கும் சுரேகா வாணி

நடிகை சுரேகா வாணி முதல்முறையாகத் தனது இரண்டாவது திருமணம் குறித்த செய்திகளுக்குப் பதிலளித்திருக்கிறார். 
 

தமிழ், தெலுங்குப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வருபவர் சுரேகா வாணி. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். விஜய்யின் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழும். அந்தக் கல்லூரி மாணவர்கள் இருவரில் ஒருவரின் தாயாக சுரேகா நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் அந்தக் காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும், டெலீட்டட் சீன்கள் சோசியல் மீடியாவில் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. 


சுரேகாவுக்குத் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். டீன் ஏஜ் மகளான சுப்ரிதா தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டே சினிமா வாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கிறார். இவரது கணவர் உடல் நலக் குறைவால் கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பிறகு தனது மகளுடன் தனியாக வசித்து வரும் சுரேகா, தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 


இந்தநிலையில், சுரேகா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. அதுவும் தனது மகள் சுப்ரிதாவின் சம்மதத்துடன் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. முதல்முறையாக இதுகுறித்து பேசியிருக்கும் சுரேகா, தனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்ததில்லை என்று விளக்கமளித்திருக்கிறார். தற்போதைய சூழலில் தனது மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் வேலைகளில் அவர் பிஸியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் சுரேகாவுக்கு நெருக்கமானவர்கள்.  


 

From around the web

Trending Videos

Tamilnadu News